உலகக் கோப்பை கிரிக்கெட்; நியூசிலாந்து - நெதர்லாந்து இன்று மோதல்!

By காமதேனு

2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று நடைபெற உள்ள 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை திணறடித்த நியூசிலாந்து, தனது வெற்றியை தொடரும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE