ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்....திணறும் இந்திய அணி!

By காமதேனு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 199 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி சுருண்டது. அதனை அடுத்து ஆடிய இந்திய அணியின் 3 தொடக்க வீரர்கள் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளனர்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 199க்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஜடேஜா 3 விக்கெட்டுகள், குல்தீப், பும்ரா தலா 2 விக்கெட்டுகள் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் முதல் ஓவரின் 4 வது பந்தில் ஸ்டார்க் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்ததாக 1.3வது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா ஹேசல்வுட் பந்தில் எல்பிடபுள்யூ முறையில் டக் அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டானார். அடுத்தடுத்து 3 வீரர்களும் டக் அவுட்டானதால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்தி தெரிஞ்சவன் வாடா!’

இந்தியாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரும் இந்து கோயில்; நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு!

அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம்... நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; 320 பேர் பலி!

ஓசூர் அருகே பட்டாசு கடை தீவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு!

இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE