199 ரன்னில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா... அலறவிட்டது இந்தியாவின் பந்துவீச்சு!

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறந்த பந்துவீச்சு காரணமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 199 ரன்கள் மட்டும் எடுத்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிச்சல் மாரஷ், பும்ராவின் பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து டேவிட் வார்னருடன் கூட்டணி அமைத்த ஸ்டீவன் ஸ்மித் ஓரளவிற்கு ரன்கள் சேகரித்தார். இருப்பினும் ஜடேஜா, அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் துல்லியமான சுழல் பந்து வீச்சு காரணமாக ரன் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் திணறினர்.

ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 199 ரன்கள் மட்டும் எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. முதல் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை குறைந்த ரன்களில் சுருட்டியுள்ளதால் வெற்றிக் கணக்குடன் தொடரை தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்தி தெரிஞ்சவன் வாடா!’

இந்தியாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரும் இந்து கோயில்; நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு!

அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம்... நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; 320 பேர் பலி!

ஓசூர் அருகே பட்டாசு கடை தீவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு!

இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE