ஆப்கானிஸ்தானை சுருட்டியது வங்கதேசம்... உலகக்கோப்பையில் அசத்தல் வெற்றி!

By காமதேனு

உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணிக்கெதிரான போட்டியில் களம் கண்ட ஆப்கானிஸ்தான் அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய வங்கதேசம் வெற்றிபெற்றது.

2023ம் ஆண்டுக்கான 50வது ஓவர் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது. இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்தப் போட்டிகள் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளன. உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் தர்மசாலாவில் மோதின. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. முன்னதாக அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, வங்கதேசத்தை பழிதீர்க்க ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்மதுல்லா உமர்சாய் தலா 22 ரன்களும், ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி அகியோர் தலா 18 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனைத் தொடர்ந்து 37.2 ஓவர்களில் அந்த அணி 156 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. வங்கதேசம் அணி தரப்பில் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன், மெகிடி ஹசன் ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மெஹிதி ஹசன் 57 ரன்களையும், நஜ்முல் ஹுசைன் சாண்டோ 59 ரன்களையும் எடுத்தனர் இதன் காரணமாக வங்கதேச அணி 34.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE