4வது முறையாக தங்கம்... ஆசிய விளையாட்டுப் போட்டியில் அசத்திய இந்திய ஹாக்கி அணி!

By காமதேனு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஹாக்கி பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இந்திய அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்க்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில் ஹாக்கி பிரிவில் இந்திய அணியும், ஜப்பான் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஹர்மன்பிரீத் சிங் தனக்குக் கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றி அசத்தினார்.

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணி வீரர்கள்.

மண்ப்ரீத் சிங், அமித் ரோகிதாஸ், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் பாரீஸில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய அணி நேரடியாக தேர்வு பெற்றுள்ளது.

இன்றைய தங்கப் பதக்கத்தின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை இந்திய அணி வென்றுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE