உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, உலகக் கோப்பை போட்டி தொடர் இன்று இந்தியாவின், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கியது. இந்த போட்டி தொடர் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று மதியம் 2.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி தொடங்கியது. அதில் உலகக் கோப்பை தொடருக்கான பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டியை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த மைதானத்தில் நடைபெற்றது.
ஆனால், போட்டிகளைக் காண டிக்கெட் வாங்க கடும் போட்டி நிலவியதாக பிசிசிஐ தெரிவித்தது. இணையத்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை என பலரும் கூறி வந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது.
ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் மைதானம் 10,000 ரசிகர்கள் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இது இந்தியாவின் மானத்தை காற்றில் பறக்க வைப்பது போல் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டிக்கு வர்ணனையாளராக வந்த கெளதம் கம்பீர் வெறிச்சோடிய மைதானத்தைப் பார்த்து முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக சொன்னீர்களே என்று பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்