உள்நாட்டு கிரிக்கெட் இப்போதுதான் நினைவுக்கு வருகிறதா?: ரோகித்திற்கு கேள்வி

By KU BUREAU

தொடரை இழந்தால் தான் உள்நாட்டு கிரிக்கெட் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இலங்கையில் உள்ள கொழும்பில் பிரேமதாச மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து 249 ரன்களை குவித்தது. இதன் பின் விளையாடிய இந்திய அணி 26.1 ஓவரில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்து 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான தொடரை இந்தியா இழந்துள்ளது. போட்டியின் தோல்விக்கு சக வீரர்களின் பேட்டிங் தோல்வியே காரணம். அணியின் வெற்றிக்கு உதவி முயற்சித்தேன். ஆனால், மற்ற வீரர்கள் பேடடிங் செய்யத் தவறி விடடனர். ஒரு போட்டியை தனித்து வெல்வது கடினம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது மிகவும் முக்கியம். உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான வீரர்களை முக்கியமாக தேர்வு செய்ய வேண்டும். நமது உள்நாட்டு கிரிக்கெட் தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு" என்று கூறியுள்ளார். அவரின் கருத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்," தொடரை இழந்தால்தான் உள்நாட்டு கிரிக்கெட் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் உங்களை விட (ரோகித் சர்மா) சிறப்பாக செயல்பட்ட எத்தனையோ வீரர்கள் இருந்தும், அவர்களுக்கு வாய்ப்பு தராமல், ஐபிஎல்லில் விளையாடிய வீரர்களுக்கு உங்கள் உள் அரசியலால் வாய்ப்பு கொடுக்கிறீர்கள். இப்போது, ​​உங்கள் காலடியில் தண்ணீர் வரும்போது, ​​உங்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட் நினைவுக்கு வருகிறது" என்று ரோகித்தை கண்டித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE