ஸ்டேடியத்தில் மோசமான இருக்கைகள்! கொந்தளிக்கும் ரசிகர்கள்; உலகக்கோப்பை போட்டியில் அவலம்

By காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் சில மைதானங்கள் முழுமையாக தயார் நிலையில் இல்லை என்கிற புகார்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து முன்னணி அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டிகள் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த ஓராண்டிற்கும் மேலாக மைதானங்களை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த ஐபிஎல் தொடரின் போது ஹைதராபாத்தில் உள்ள உப்பால் மைதானத்தில் இருக்கைகள் சேதமடைந்து இருப்பதாக போட்டியை காண சென்ற ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்த மைதானம் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் மேற்கு பகுதியில் உள்ள இருக்கைகளில் சில மாற்றப்படாமல் தற்காலிகமாக சுத்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மைதானத்தில் சுற்றி வரும் புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் இந்த இருக்கைகளின் மீது எச்சங்களை இட்டு வைத்திருப்பதால் ரசிகர்கள் அதில் அமர முடியாத சூழல் இருந்து வருகிறது. இது தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையாளர் வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. போட்டிகளை ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் முழுமையாக சுத்தப்படுத்தி இருக்க வேண்டும் எனவும் சேதமடைந்த இருக்கைகளை மாற்றி அமைக்காமல் அவற்றை தற்காலிகமாக சீரமைத்தது சரியான செயல் அல்ல எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஏராளமான பொருட் செலவில் செய்யப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை, ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும், இந்தியா, கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியான நாடு என்பதில் சந்தேகம் இருக்க முடியாது எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

இன்று கோலாகலமாக தொடங்குகிறது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா!

கார் ஓட்டக் கற்றுக்கொடுத்த மகன்; கிணற்றில் பாய்ந்து தந்தை உயிரிழப்பு!

செல்போன் விளையாட்டால் விபரீதம்; மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன்

பெரும் சோகம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்! தேடுதல் வேட்டை தீவிரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE