ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப்பதக்கம் வென்றார்.
சீனாவின் ஹான்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சீனா ஆதிக்கம் செலுத்தியுள்ள போதும், இந்திய வீரர்கள் கணிசமான பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இலங்கை வீராங்கனையை பின்னுக்கு தள்ளி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டில் இதுவரை 15 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 15 தங்கம், 26 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!
அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!
டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!
நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!
நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!