தோனியின் நியூ லுக்... அசத்தல் ஹேர் ஸ்டைலில் புகைப்படம் வைரல்!

By காமதேனு

புதிய சிகையலங்காரத்துடன் கூடிய மகேந்திர சிங் தோனியின் படு ஸ்டைலான தோற்றங்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து 3 வருடங்களாகிறது. ஆனபோதும் களத்தில் விளையாடும் இதர முன்னணி கிரிக்கெட் வீரர்களைவிட வழக்கம்போல லைம்லைட்டில் முன்னிலை வகிக்கிறார் தோனி. அதிலும் அவரது ஸ்டைல் ஐகான் பிரபல்யம் தொடரவே செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக குதிரை வால் குடுமியுடன் தோன்றிய தோனியின் முந்தைய ஹேர் ஸ்டைல், சில மாதங்களாக இளைஞர்களையும் குதிரை வால் உடன் அலைய வைத்தது. ஆனால் சலூன்கள் மற்றும் ஆண்களுக்கான அழகு சாதன நிறுவனங்கள், தங்கள் வசமுள்ள தோனியின் பிரம்மாண்ட பதாகையாக தற்போது மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹகீம் உடன் தோனி

முன்னெப்போதும் இல்லாத புதிய தோற்றத்தில் பரிமளிக்க ஆரம்பித்திருக்கிறார் தோனி. அவரது முகவெட்டுக்கு அசலான பொருத்தத்தோடும் இந்த சிகையலங்காரம் ஒத்துப்போவதாக, தோனியின் நியூ லுக் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரபல சிகையலங்கார நிபுணரான ஆலிம் ஹகீம், புதிய தோற்றத்திலான தோனியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். தோனி தோன்றவிருக்கும் புதிய விளம்பரம் ஒன்றுக்கான இந்த புகைப்படங்களில், தோனியின் ஹேர்ஸ்டைல் மட்டுமன்றி அவர் அணிந்திருக்கும் கூலர்ஸ் ரகமும் இளைஞர்களை வசீகரித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!

நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE