உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்த 4 அணிகளே தகுதிபெறும்? - முன்னாள் கேப்டனின் அதிரடி கணிப்பு!

By காமதேனு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்ற கணிப்பை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில், போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அதிக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா என இந்த மூன்று அணிகளும் பலமிக்க அணிகளாக கணிக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அடுத்து ஆசிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க ஆகிய அணிகள் இருக்கின்றன. இந்த மூன்று அணிகளுமே நான்காவது இடத்திற்கு போட்டியிடும் அணிகளாக மட்டுமே இல்லை. இவர்கள் இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சியையும் தர முடியும். ஒருவேளை இவர்கள் யாரையாவது வெளியேற்ற கூட வாய்ப்பும் உள்ளது.

மைக்கேல் வாகன்

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்காக ஆசஸ் கிரிக்கெட் தொடரை வென்ற முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு, தன்னுடைய நான்கு அரைஇறுதி அணிகளை தேர்வு செய்திருக்கிறார். அதில் அவர் ஒரு ஆச்சரியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர், “இந்த வாரத்தில் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தற்போது பல வீரர்களாலும், கிரிக்கெட் ரசிகர்களாலும் பலமிக்க அணியாக கருதப்படுகிற ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு வராது என்று அவர் கூறியிருக்கிறார். வழக்கமாக கிரிக்கெட் உலகில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆகாது. அதனுடைய பிரதிபலிப்புதான் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனின் கருத்து என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!

நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE