ஒலிம்பிக்கில் இந்தியா அபாரம் - டேபிள் டென்னிஸில் மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

By KU BUREAU

பாரிஸ்: ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியுள்ளது. ருமேனியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

இன்று நடந்த போட்டியில், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ருமேனியா அணியை எதிர்கொண்ட இந்திய அணியினர் 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ரவுண்ட்- ஆஃப் 16 போட்டியில் இந்திய அணி சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள். இதில் இதில் இந்திய அணி ரோமானியா அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த ரவுண்ட் ஆஃப் 16 – சுற்று போட்டியில், மொத்தம் 5 போட்டிகள் இவ்விரு அணிகளும் இடையே நடைபெறும். அதன்படி, நடைபெற்ற ஐந்து போட்டிகளில் இந்திய அணி மூன்றுக்கு இரண்டு என திரில்லாக ரோமானியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் முறையாக ஒலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே டேபிள் டென்னிஸ் மகளிர் அணி, இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE