ஒலிம்பிக் மகளிர் 100 மீட்டர்: ஆல்பிரட்டுக்கு தங்கம்

By KU BUREAU

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியா ஆல்பிரட் தங்கம் வென்றார்.

நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் 100 மீட்டர் பந்தயத்தில் 10.72 விநாடிகளில் ஜூலியா ஆல்பிரட் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார். அமெரிக்காவின் ஷகாரி ரிச்சர்ட்சன் 10.87 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளியும், மெலிசா ஜெபர்சன் 10.92 விநாடியில் கடந்து வெண்கலமும் வென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE