‘மிடில் ஓவர்களில் விளையாடுவது கடினமானதாக இருந்தது’ - தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித்

By KU BUREAU

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய அணி. இந்தப் போட்டிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டது.

“நீங்கள் ஆட்டத்தில் தோல்வியை தழுவும் போது அது வேதனை அளிக்கும். நான் அந்த பத்து ஓவரை குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆட்டத்தில் கன்சிஸ்டன்ட் இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் நாங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. அது சிறிய ஏமாற்றம் தான். ஆனால், விளையாட்டில் இது இயல்பானது.

ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப ஆட வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய எளிதாக இருக்கும் என கருதி நாங்கள் வலது - இடது காம்போவை முயற்சி செய்தோம். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி அபாரமாக பந்து வீசி இருந்தார். அவர் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

நான் 65 ரன்கள் எடுக்க காரணம் அதிகம் ரிஸ்க் எடுத்து ஆடியது. பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும். ஏனெனில், மிடில் ஓவர்களில் விளையாடுவது இங்கு கடினமானதாக உள்ளது. நாங்கள் இன்று சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எப்படி ஆடினோம் என்பது குறித்து அதிகம் பேசப் போவது இல்லை. இருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்டிங் சார்ந்து விவாதிப்போம்” என ரோகித் தெரிவித்தார்.

கேப்டன் ரோகித் சொல்வது போல மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு பேட்டிங்கில் சிறந்த தொடக்கம் கிடைத்தது. இருந்தும் அதை அப்படியே தொடர நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தவறிவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE