ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி - பாரிஸ் ஒலிம்பிக்கில் அபாரம்!

By KU BUREAU

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி. இதன் மூலம் 52 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 1972 ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திருந்தது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி பிரிவில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் பி பிரிவில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. அபிஷேக் மற்றும் ஹர்மன்பிரித் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இரண்டாவது பாதியில் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார். இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்திய அணி வரும் 4ம் தேதி காலிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா ஆகிய 4 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE