பாரிஸ்: ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் பிரிவு போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 252.2 புள்ளிகள் பெற்று சீனாவின் செங் தங்கப்பதக்கம் வென்றார். 251.4 புள்ளிகள் உடன் ஸ்வீடனின் லிண்ட்கிரென் வெள்ளிப் பதக்கத்தையும், குரோஷியாவின் மரிசிச் 230 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 208.4 புள்ளிகள் மட்டுமே பெற்ற அர்ஜுன் பபுதா 4வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது.
ஆண்கள் டிராப் தகுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் பிரித்திவிராஜ் தொண்டைமான் பங்கேற்றுள்ளார். மொத்தமுள்ள 5 சுற்றுகளில், 2 சுற்றுகள் முடிவில் 47 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் 50 புள்ளிகளுடன் துருக்கி வீரர் துசுன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
» ஏரியில் 5 பொக்லைன்கள் கொண்டு வண்டல் மண் எடுப்பு: போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்
» ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்