சச்சின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நம்பிக்கை

By KU BUREAU

டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அததுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தற்போது நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கும் ஜோ ரூட், வரும் நாட்களில் சச்சின் டெண்டுல்கரின் மிகப் பெரிய சாதனையை முறியடிப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டில் தனது 32வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த ஜோ ரூட், தற்போது ரன் குவித்தவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க அவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 329 இன்னிங்ஸ்களில் மொத்தம் 15,921 ரன்கள் எடுத்துள்ளார். ஜோ ரூட் இதுவரை 260 இன்னிங்ஸ்களில் 11.940 ரன்கள் குவித்துள்ளார்.

"ஜோ ரூட் அற்புதமான ஃபார்மில் உள்ளார். இந்த ஃபார்மில் தொடர்ந்து அவர் விளையாடினால் சச்சின் டெண்டுல்கரை நிச்சயம் முந்தலாம். இந்த நாட்களில் அவர் மிகவும் கவனமாக பேட்டிங் செய்கிறார். மேலும் விரைவாக ரன்களை அடிக்கிறார். எனவே வரும் தொடரில் சச்சினின் சாதனையை ரூட் சமன் செய்வார்" என மைக்கேல் வாகன் கூறினார்.

33 வயதான ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்களின் சாதனையை முறியடிக்க இன்னும் 3,982 ரன்கள் மட்டுமே உள்ளன. ஏற்கெனவே 32 சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட் அபாரமாக பேட்டிங் செய்வதால் வரும் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் ஆவதற்கு ரூட்டுக்கு 532 ரன்கள் மட்டுமே தேவை. இந்தப் பட்டியலில் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்துக்காக 291 இன்னிங்ஸ் விளையாடிய அவர் மொத்தம் 12.472 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது 11,940 ரன்கள் குவித்துள்ள ரூட்டுக்கு வரும் தொடரின் மூலம் ஜோ ரூட் புதிய சரித்திரம் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE