பாரிஸ் ஒலிம்பிக் 2024: கால்பந்து போட்டியுடன் இன்று தொடங்குகிறது

By KU BUREAU

பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டி ஜூலை 26-ம் தேதி முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் கால்பந்து மற்றும் ரக்பி போட்டிகள் இன்று (ஜூலை 24) முதல் தொடங்குகிறது.

சர்வதேச விளை​யாட்டுத் திரு​விழாக்​களில் பிரம்​மாண்​ட​மானது ஒலிம்​பிக் போட்டி. 33-வது ஒலிம்​பிக் திரு​விழா, ‘காதல் நகரம்’ என்றழைக்​கப்​படும் பிரான்​ஸின் தலைநகர் பாரிஸில் இன்று தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு முன்னதாக போட்டியைத் தொடங்கும் பாரம்பரியம் 1992-ம் ஆண்டு தொடங்கியது. பார்சிலோனா ஒலிம்பிக்கில் முதன்முறையாக தொடக்கவிழாவிற்கு முன்னதாக சில போட்டிகள் நடத்தப்பட்டன.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்த பாரம்பரியம் தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம் வீரர்களுக்கு ஏற்படும் தளர்வு. அதாவது கால்பந்து, ரக்பி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் போட்டியிடும் வீரர்களுக்கு அதிக ஓய்வு தேவை. எனவே, ஒரு போட்டியிலிருந்து மற்றொரு போட்டிக்கு 48 மணி நேரம் ஓய்வு அளிக்கும் வகையில் சில போட்டிகளைத் தொடக்கத்திற்கு முன்பே ஏற்பாடு செய்யும் வழக்கம் தொடங்கப்பட்டது.

மற்றொரு காரணம் மைதானத்தின் பயன்பாடாகும். கால்பந்து மற்றும் ரக்பி போன்ற சில போட்டிகள் நீண்ட காலமாக நடத்தப்படுகின்றன. அதாவது முதல் சுற்று, இரண்டாவது சுற்று, அரையிறுதி, இறுதி என நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் போட்டிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படும். எனவே தொடர்ந்து போட்டிகளை நடத்த மைதானம் தேவை. எனவே கால்பந்து உள்ளிட்ட சில போட்டிகள் ஒலிம்பிக்கின் மற்ற போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டி இன்று தொடங்குகிறது. விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ள போதிலும், சில போட்டிகள் இன்று முதல் தொடங்கும். அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கால்பந்து போட்டியுடன் தொடங்கும், முதல் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் மொராக்கோ அணிகள் மோதுகின்றன. மேலும், இந்தியா ஜூலை 25-ம் தேதி வில்வித்தையுடன் ஒலிம்பிக் போட்டியில் தனது ஆட்டத்தை தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE