முதல் நாளில் 500 ரன்கள் குவித்த இங்கிலாந்து - 4 வீரர்கள் சதம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை!

By காமதேனு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடந்த டெஸ்ட் போட்டியின் தொடக்க நாளில் 500 ரன்களை எடுத்து, இங்கிலாந்து அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

ராவல்பிண்டி மைதானத்தில் இன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் டி20 போட்டி போல அதிரடி காட்டினர். ஸாக் க்ராவ்லே (122 ரன்கள்), பென் டக்கெட்(107 ரன்கள்), ஒலீ போப்(108 ரன்கள்), ஹாரி ப்ரூக் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் என நான்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சதம் அடித்ததால், ஆட்ட நேர முடிவில், அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்களை எடுத்தது.

இதற்கு முன் 1910ல் சிட்னியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 494 ரன்கள் குவித்ததே முதல் நாளில் அதிகபட்சமாக ரன்கள் குவித்த சாதனையாக இருந்தது. ஒரு நாளில் 500 ரன்களுக்கு மேல் இதுவரை நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. மூன்று முறை இங்கிலாந்து அணியும், ஒரு முறை இலங்கை அணியும் இந்த சாதனையை செய்துள்ளது. ஆனால் ஒரு டெஸ்டின் தொடக்க நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்கள் குவித்ததில்லை.

1936ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இங்கிலாந்து 588 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்கள் குவித்த சாதனையாக இருந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE