சூர்யகுமார் யாதவுக்கு முதலிடம்: ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அபாரம்!

By காமதேனு

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 863 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 842 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் இரண்டாம் இடத்திலும், 792 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் டெவன் கன்வே 3ம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 10ம் இடத்தில் இருக்கிறார்.

இன்று நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சூர்யகுமார் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஏற்கெனவே இவர் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் 164 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 220 ரன்கள் குவித்து விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE