உலக சாம்பியனை வீழ்த்திய 16 வயது இளைஞர்: கார்ல்சனுக்கு செக் வைத்த தமிழக செஸ் வீரர் குகேஷ்!

By காமதேனு

இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷ் டி, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் சதுரங்க வீரர் என்ற வரலாறு படைத்தார்.

எய்ம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து, உலக சாம்பியனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் நிகழ்த்தினார். முன்னதாக, இந்த போட்டியில் இந்தியாவின் 19 வயது கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை தோற்கடித்திருந்தார்.

நம்பமுடியாத வகையில், மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் புதிய திறமையான இளைஞர்களில் இரண்டாவது நபரிடம் கார்ல்சன் தோல்வியை சந்தித்துள்ளார். குகேஷின் வெற்றியைத் தொடர்ந்து , "வரலாற்றில் என்ன ஒரு நினைவுச்சின்னமான நாள். இது குகேஷின் நம்பமுடியாத ஆட்டம்" என்று சர்வதேச மாஸ்டர் ஜோவாங்கா ஹவுஸ்கா கூறினார்.

9வது சுற்று ஆட்டத்தின் முக்கிய தருணம், குகேஷ் வெற்றி பெறுவார் என்ற நிலையில் கார்ல்சனுக்கு அது நன்றாகத் தெரிந்தது. கார்ல்சன், வடக்கு ஸ்வீடனிலிருந்து விளையாடிக் கொண்டிருந்தார், தனது தவறை உணர்ந்த பிறகு தனது நகர்வைப் பற்றி யோசித்து ஐந்து நிமிடங்களைச் செலவிட்டார். அவர் தலையை அசைத்து, சைகை செய்து, நாற்காலியில் சுழன்று கொண்டிருந்தார். வெளிப்படையாக, அவர் தன் மீது கோபமாக இருப்பது தெரிந்தது. சில நகர்வுகளுக்குப் பிறகு அவர் தோல்வியடைந்தார்.

கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷுக்கு 16 வயது 4 மாதங்கள் 20 நாட்கள் ஆகும். அதே நேரத்தில் இதே ஆண்டு பிப்ரவரியில் கார்ல்சனை வீழ்த்தியபோது பிரக்ஞானந்தாவின் வயது 16 வயது 6 மாதங்கள் 10 நாட்கள் ஆகும். இதன் மூலமாக உலகசாம்பியனை வீழ்த்திய இளம் வீரர் என்ற வரலாற்று சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE