ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த ரஷ்ய மாடல்: வைரலாகும் போட்டோஸ்

By KU BUREAU

விவாகரத்து சர்ச்சை புகைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரஷ்ய மாடலும், நடிகையுமான எலினா டுடேஜாவுடன் ஜோடி சேர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவரது மனைவி நடிகை நடாஷா ஸ்டோன்கோவிக். இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்திகள் குறித்து இதுவரை இவர்கள் இருவரும் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது டேவிட் மில்லரின் முக்கியமான விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றதில் ஹர்திக் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்த போது கூட, அவரது மனைவி நடாஷா எந்த பதிவையும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ஆனந்த் அம்பானியுடன் திருமண விருந்தில் கூட ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷ் ஸ்டான்கோவிக் காணப்படவில்லை. தனியாக வந்து நடனமாடினார்.

இந்த நிலையில் ரஷ்ய மாடலும், நடிகையுமான எலினா டுடேஜா, ஹர்திக் பாண்டியாவுடன் சில படங்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில், சில புகைப்படங்களை வெளியிட்டு ஹர்திக் பாண்டியாவுடன் போட்டோ ஷூட் என்று குறிப்பு எழுதியுள்ளார். அதில், “இந்தியா தனது சாம்பியனைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதால், அவர்களில் ஒருவருடன் எனது புகைப்படம் எடுக்க முடிவு செய்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1993-ம் ஆண்டு மாஸ்கோவில் பிறந்த எலினா டுடேஜா, ரஷ்ய மாடல் அழகி மட்டுமின்றி நடிகையும் ஆவார். .நடிப்பு மற்றும் மாடலிங்கில் தனது வாழ்க்கையைத் தொடங்க மும்பை சென்றார். மிஸஸ் இந்தியா எர்த் போட்டியில் பங்கேற்றவர்களில் இவரும் ஒருவர். 2017-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 2வது ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'பார்ட்னர்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் இந்தியாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். 2020-ம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படமான 'கெஹ்தா ஹை யே தில்' படத்தில் நடித்தார். அத்துடன் 'சவதான் இந்தியா', ​​'பத்தமீஸ் தில்',போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE