விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து வாங்கிய பண்ணை வீடு: விலை எவ்வளவு தெரியுமா?

By காமதேனு

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து மும்பை அலிபாக்கில் ரூ.19 கோடிக்கு பண்ணை வீடு ஒன்றை வாங்கியுள்ளனர்.

மும்பை அருகே உள்ள அலிபாக் எனும் இடத்தில் 8 ஏக்கர் நிலத்தில் ஒரு பண்ணை வீட்டினை விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் ரூ.19.24 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்கள் இதற்காக அரசு கருவூலத்தில் ₹1.15 கோடி டெபாசிட் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அலிபாக்கில் ஜிராத் என்ற கிராமத்திற்கு அருகில் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் இந்த பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர். விராட் கோலி இப்போது ஆசிய கோப்பை போட்டிக்காக துபாயில் இருப்பதால், இந்த பரிவர்த்தனையை அவரது சகோதரர் விகாஸ் கோலி முடித்தார். இதற்கான முத்திரைத் தொகையாக ரூ.3.35 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர்

2021ம் ஆண்டில் அலிபாக் பகுதியில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்து ரூ.1.32 கோடி முத்திரைக் கட்டணத்துடன் ரூ.22 கோடிக்கு ஒரு பண்ணை வீட்டினை வாங்கினர். கடந்த மாதம், அவர்கள் இங்குள்ள பண்ணை வீட்டில் கிரஹ பிரவேஷ பூஜையும் செய்தனர். மாப்கான் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த வீடு 9,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி ஆகியோரும் அலிபாக்கில் ஒரு பண்ணை வீடு வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE