யாருக்கு கோப்பை?... இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

By காமதேனு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டி கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக விளங்குகிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் இரு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன. இந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெறுகிறது.

இரு அணிகளும் இது வரை 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் இந்தியா 56 போட்டிகளில் வெற்றியும், 44 போட்டிகளில் தோல்வியும் பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகள் யாருக்கும் வெற்றி தோல்வி இன்றியும், 3 போட்டிகள் முடிவு பெறாமலும் முடிந்தன. கடைசி ஐந்து போட்டிகளில் இந்தியா மூன்றிலும், இங்கிலாந்து இரண்டிலும் வென்றுள்ளன.

அதிலும் மான்செஸ்டர் நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக முறை தோல்வியை தழுவியிருக்கிறது என்பதால் இன்றைய போட்டியில் அந்த வரலாற்றை மாற்ற இந்தியா முயலும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE