“லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை” - பிறந்தநாளில் தோனியை புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

By காமதேனு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் எம்.எஸ்.தோனி. எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர உங்களின் இணையற்ற சாதனைகள்தான் நம்பிக்கையை அளித்துள்ளது. நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்தவர் தோனி. ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து பல முறை சாம்பியன் கோப்பையை வசமாக்கித் தந்தார் தோனி. இவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE