இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்கள்: முதல் இந்தியர் கோலிதான்

By காமதேனு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 20 கோடி ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி.

மெட்டா நிறுவனத்தின் புகைப்படம், வீடியோ ஷேரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தளத்தை பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வலையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட பிரபலங்களில் ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி. வீடியோ, புகைப்படம் உள்ளிட்டவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருபவர் கோலி.

தற்போது, 20 கோடி ( 200 மில்லியன்) ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் எட்டியுள்ளார் கோலி. விளையாட்டு துறையில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை தொடர்ந்து 3-வதாக 200 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார் கோலி. அது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு, நன்றியும் தெரிவித்துள்ளார் கோலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE