செஸ் ஒலிம்பியாட் லோகோ ரெடி பண்ணுங்க, பரிசு காத்திருக்கு!

By காமதேனு

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த லோகோ உருவாக்கி கொடுப்போருக்கு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக 44-வது உலக செஸ்ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த போட்டியை நடத்த சென்னை நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை போட்டிகளை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. செஸ் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 200 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த லோகோ, மேஸ்காட், டேக்லைன் உருவாக்க தேசிய அளவிலான போட்டியை தமிழக அரசு நடத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வாெரு பிரிவிலும் வடிவமைப்பை அனுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல் பரிசு ரூ.75 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் போட்டியில் பங்கேற்போர் தங்களது வடிவமைப்பை மார்ச் 26் தேதிக்குகள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE