விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த தொடரின் போது, ஹபீஸ் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்ததையடுத்து ஐசிசியில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பந்துவீச தடைவிதிக்கப்பட்டது. மேலும், இங்கிலாந்தில் கடந்த 1ம் தேதி அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஐசிசியின் விதிமுறைக்கு மாறாக அவர் பந்துவீசுவது தெரியவந்ததால் 24 மாதங்கள் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நவம்பர் 2014-ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது விதிமுறை மீறி பந்து வீசியதாக ஹபீஸ் தடை விதிக்கப்பட்டார். பின்னர் தனது பந்து வீச்சை சரிசெய்தபின் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இலங்கையில் நடந்த போட்டியின்போதும் விதிமுறையை மீறி பந்துவீசினார். குறிப்பிட்ட காலத்துக்குள் 2 முறை அப்படி பந்துவீசியதால் 24 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளார்.