இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திடீர் ஓய்வு அறிவிப்பு!

By காமதேனு

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா, 14-வது ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார்.

19 வருடங்களாக விளையாடி வரும் சானியா மிர்சா, தற்போது, ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் சானியா மிர்சா கலந்துகொண்டார். இதன் பின்னர் பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி - ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா இணை தோல்வி அடைந்தது.

இதைத் தொடர்ந்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது குறித்து சானியா மிர்சா கூறுகையில், "இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது. நான் எங்கு சென்றாலும் எனது மூன்று வயது மகனை உடன் அழைத்து செல்வதன் மூலம் அவனுடைய ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். இந்த சீசன் முடியும் வரை நான் விளையாடுவேன். கடின உழைப்பால் எனது உடல் எடையை குறைத்து, இளம்தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE