ஆஸ்திரேலிய மண்ணை அதிரவைத்த இளம் படை!- புதிய பாய்ச்சல் நிகழ்த்திய இந்திய புலிகள்

By காமதேனு

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றியை நாடே கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஓர் உலகக் கோப்பை வெற்றிக்கு இணையாக இந்த வெற்றி ஆராதிக்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் வெற்றிக்கு ஏன் இவ்வளவு ஆரவாரம்?

ஆத்திரத்துடன் காத்திருப்பு

1947 முதல் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாடிவருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வது என்பதே குதிரைக் கொம்புதான். எனினும், 2018-19-ல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அந்தக் குறையைப் போக்கியது. இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று புதிய சரித்திரத்தை எழுதியது. அதேசமயம், பலவீனமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், நேர்த்தியான ஆட்டக்காரர் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தடைக் காலத்தில் இருந்ததால் போட்டியில் விளையாட முடியாமல் இருந்தனர். இந்தக் குறைகளையெல்லாம் கச்சிதமாகப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை விராட் கோலி அணி வீழ்த்தியதில் ஆச்சரியமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE