ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னும்...

By காமதேனு

“இந்த வெற்றி எனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. என் கணவரும் பயிற்சியாளருமான ரோணக் பண்டிட்டுக்கு இதில் சரிபாதி பங்கு இருக்கிறது” என்று 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில், 38 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில், விழிகளில் கசிந்த நீரைத் துடைத்துக்கொண்டே கூறுகிறார் ஹீனா சித்து. இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் ரோணக் செய்த தியாகத்தின் மதிப்பு மிக அதிகம். ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்’ என்பர்கள். ஆனால் ஹீனா சித்துவைப் பொறுத்தவரை அவரது வெற்றிக்கு முழு காரணமும் ரோணக்தான்.

ஹீனாவின் மாமா துப்பாக்கி விற்பனை மற்றும் அதை ரிப்பேர் செய்யும் தொழில் செய்து வந்ததால், சிறு வயதில் இருந்தே ஹீனாவுக்குத் துப்பாக்கி மீது ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்தார். டாக்டர் ஆவதை லட்சியமாகக் கொண்டு தினமும் 14 மணி நேரம் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தவர், மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்காகத் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார்.

மருத்துவக் கல்லூரியில் சீட் பெற தனது மதிப்பெண்ணுடன் சேர்த்து விளையாட்டில் பெறும் பதக்கங்களும் உதவும் என்று அவர் கருதியதும் மற்றொரு காரணம். 2006-ம் ஆண்டு தேசிய ஜூனியர் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற ஹீனா சித்து, அதைத் தொடர்ந்து வரிசையாகப் பல்வேறு போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். பல் மருத்துவ நிபுணர் ஆன பிறகும் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று வகை சூடினார். 2009-ம் ஆண்டு உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். 2012-ம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அவர் ரோணக் பண்டிட்டைச் சந்தித்தார். ரோணக்கின் குடும்பமே துப்பாக்கி சுடுதலில் தங்களை நிரூபித்த குடும்பம்தான். ஹீனாவுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த உக்ரைன் பயிற்சியாளர்தான் ரோணக்குக்கும் பயிற்சியாளர்.

ரோணக்கைப் பொறுத்தவரை அவர் அந்த ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளுக்காகத் தன்னை பட்டை தீட்டிக்கொள்ள உக்ரைன் பயிற்சியாளரிடம் வந்திருந்தார். வந்த இடத்தில் பயிற்சியுடன் சேர்ந்து ரோணக் - ஹீனா சித்து ஜோடியின் காதலும் வளர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE