நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்..!- தங்கமகன் சதீஷ்குமார் சிவலிங்கம்

By காமதேனு

சினிமாவில் க்ளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ எவ்வளவுதான் அடிவாங்கினாலும் இறுதியில் ஜெயித்துவிடுவார். இயல்பிலும் அப்படித்தான் காமன்வெல்த் போட்டியில் பதக்கத்தை வென்றிருக்கிறார் பளு தூக்கும் வீரரான சதீஷ்குமார் சிவலிங்கம்!

சில மாதங்களுக்கு முன் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்துடனேயே காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றார் சதீஷ்குமார். அந்த காயத்தின் வலியையும் தாண்டி போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு காமன்வெல்த்தில் இது 2-வது தங்கப் பதக்கம். பளுதூக்கும் போட்டியில் தானும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையை சதீஷ்குமாருக்கு ஏற்படுத்தியவர் அப்பா சிவலிங்கம்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவலிங்கம், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் பளு தூக்கும் வீரராக தேசிய அளவில் முன்னேறினார். சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதை தனது அடுத்த லட்சியமாக அவர் வைத்திருந்தார். குடும்ப சூழ்நிலையால் அவரால் அதைச் சாதிக்க முடியவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற முதலில் ராணுவத்திலும் பின்னர் தனியார் நிறுவனத்திலும் சேர்ந்து பணியாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE