விறகு சுமந்தவரின் சர்வதேச சாதனை!- வறுமையை வென்ற மீராபாய் சானு

By காமதேனு

இந்தியாவின் ஏழ்மையான மாநிலம் மணிப்பூர் என்றால் அங்குள்ள மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று மீராபாய் சானுவுடையது. பொதுப்பணித்துறையில் கடைநிலை ஊழியராக இருந்தவருக்குப் பிறந்த 6 குழந்தைகளில் இவர்தான் கடைக்குட்டி.

அண்மையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பளு தூக்குதலில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

பதக்கம் கிடைத்தால்தான் திறமை அங்கீகரிக்கப்படும் என்ற சூழல்தான் இந்தியாவின் பல விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் எங்கோ ஒரு மூலையிலிருந்து வந்து காமன்வெல்த் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் ஸ்னாட்ச் பிரிவில் 86 மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ (மொத்தம் 196) எடையையும் தூக்கி சானு புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்திருக்கிறார்.

நமக்கெல்லாம் இது ஆச்சரியம். ஆனால், சானுவை நன்கறிந்த உறவினர்களுக்கும் கிராமத்தினருக்கும் அது ஒரு விஷயமே இல்லை. காரணம் 12 வயதிலிருந்தே கிலோ கணக்கிலான விறகுக் கட்டைகளைத் தலையில் சுமந்து 2 கிலோமீட்டர் தினமும் நடந்து சென்று குடும்ப பாரத்தைச் சுமந்தவர் மீராபாய் சானு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE