திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா எப்போது தெரியுமா? - வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அறிவிப்பு

By KU BUREAU

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று இரவு வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கோயில் நிர்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்வின்போது, இக்கோயிலில் அடுத்த ஆண்டு மார்ச் 6-ம் தேதி (மாசி 22) சனிப் பெயர்ச்சி விழா நடைபெறஉள்ளது எனவும், அன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக் கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல காரைக்கால் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE