இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர்விட்ட பின்பு, அவர் மீது வெள்ளை நிற துணியை சுத்தி கல்லறையில் அடக்கம் செய்தனர். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு அந்த வெண்ணிற ஆடை மட்டும் கல்லறையில் இருந்தது. சிலுவையில் அறையப்பட்டபோது அவருக்கு இருந்த தழும்புகள் மற்றும் சாட்டை அடி தழும்புகள் வெள்ளை நிற துணியில் பதிந்திருந்தது. இந்த துணி தற்போது வரை இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த துணியின் உண்மை தன்மையை அறிய 6 நகல்கள் எடுக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வோர் இடத்தில் அந்த துணி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு நகல் உதகையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் வைக்கப்பட்டது. அதன்பின் குன்னூரில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் வைக்கப்பட்டு, பின்பு கேரளா எடுத்துச் செல்லப்படுகிறது.
தமிழகத்தில் முதன் முறையாக உதகை சூசையப்பர் ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்ட அந்த துணிக்கு, உதகை மட்டும் இல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தொட்டு வணங்கி பிரார்த்தனை செய்தனர்.