காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோயிலில் ருத்ரயாகம் செய்த 40 ஜப்பனியர்கள்!

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள கிளார் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று தமிழ் மீதும், சித்தர்கள் மீதும் பற்று கொண்ட 40 ஜப்பானியர்கள் ருத்ரயாகம் செய்தனர். உலக நன்மைக்காக இந்த யாகும் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜப்பனாலில் தமிழ் மீதும், தமிழ் சித்தர்கள் மீதும் அக்கறை கொண்ட பலர் உள்ளனர். இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அவ்வப்போது இந்தியா வந்ந்து கோயில்களை சுற்றிப்பார்ப்பர். அதேபோல் தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழ்ந்த இடத்திலும், கோயில்களிலும் சென்று வழிபாடு செய்வர். அதுபோல் இந்த ஆண்டு ஜப்பான் தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணி தலமையில் 40 பேர் தமிழ்நாடு வந்தனர்.

இவர்களில் 25 பேர் பெண்கள். இவர்கள் பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். இவர்கள் புலிப் பாணி சித்தர் குடிலுக்குச் சென்றனர்.அங்கிருந்து இவர்கள் காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸவரர் கோயிலுக்கு வந்தனர்.

ருத்தர யாகம்: இந்தக் கோயிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஜப்பானியர்கள் பங்கேற்று யாக குண்டத்தில் பொருட்களை போட்டனர். இந்தப் பகுதி மிகவும் அமைதியான இடமாக இருப்தாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் சில இடங்களுக்கும் அவர்கள் செல்ல உள்ளனர். இந்த யாகத்தில் மோகன் ராஜ் தலைமையிலான கோயில் நிர்வாகத்தினர், விஸ்வ இந்து பரிஷித் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE