காஞ்சிபுரம் வதராஜ பெருாள் கோயில் தீர்த்தவாரி: நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை மாலை இரு வேளையும் பெருமாள் வீதியுலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 22-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 26-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நூறுகால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் குளத்துக்கு அழைத்து வரப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் வரதராஜ பெருமளை திருக்குளத்தில் மூழ்கி எடுத்து தீர்த்தவாரி விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களும் புனித நீராடினர். வரதராஜபெருமாள் கோயிலின் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரியில் கலந்துகொண்ட பக்தர்கள் புனித நீராடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE