ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
பாம்பனில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆலய பங்குத்தந்தை ரமேஷ் விழாவிற்கு தலைமை வகித்தார். பங்குத் தந்தை இனிக்கோ ஆனந்த் விழாவை துவக்கி வைத்தார். கிறிஸ்துமஸ் விழாயையோட்டி, ஜெபமாலை, புகழ்மாலை, மறையுரை மற்றும் சிறப்புத் திருப்பலி ஆகியன நடைபெற்றது.
விழாவில் சிறுவர், சிறுமிகள் மரியாவின் மடியில் குழந்தை ஏசு இருப்பது போல் துவங்கி ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடத்திக் காட்டினர். மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்து பாடல்களுக்கு ஆடியபடி மகிழ்ச்சி பறிமாறிக் கொண்டனர்.