மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில் மலையிலுள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.2-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். ஆறாம் நாளான நேற்று (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் விழா நடந்தது. ஏழாம்நாளான இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணத்தை முன்னிட்டு சஷ்டி மண்டபம் வண்ண மலர்களால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்பு தீபதூப ஆராதனைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. இத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்தனர்.
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சட்டத்தேரோட்டம்
» கந்த சஷ்டி விழா நிறைவாக சென்னிமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்