ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உள்ள முருகன் சன்னதியில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் நவ.2ல் துவங்கியது. கந்தசட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. ராமேசுவரம் மேலரத வீதியில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப் பெருமான் வேலால் சூரனின் தலையை வதம் செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, சூரனை வதம் செய்த வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் மற்றும் நடைபெற்று சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பால் காவடி மற்றும் மயில் காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE