கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை சேரன் மாநகர் பகுதியில் அமைந்துள்ள வித்யா கணபதி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வித்யா கணபதி கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீ லட்சுமி கணபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.