தொண்டி அருகே புனித செபஸ்தியார் ஆலயத்தில் முப்பெரும் விழா

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம்: தொண்டி அருகே சம்பை கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே சம்பை கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் புனித அந்தோணி மரிய கிளாரட் திருவிழா, கிளரிசியன் சபை ஆண்டு விழா மற்றும் உறுதி பூசுதல் நிகழ்வும் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் முப்பெரும் விழாவிற்கு தலைமையேற்று சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். அருட்தந்தைகள் டெல்லஸ், மறை ஆரோன் கிளரிசியன், மைக்கேல் பிரான்சிஸ், அருள்தந்தை சூசை மாணிக்கம், தேவ சகாயம், சந்தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சம்பை, கண்கொள்ளான் பட்டினம், சின்ன மடம் தோப்பு, சோழியக்குடி, காரங்காடு, திருவெற்றியூர், தொண்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE