பெரிய காஞ்சிபுரம் தர்காவில் சந்தனக்குடத் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

By KU BUREAU

காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் தர்காவில் சந்தனக்குடத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் ஹாஜ் ஹமீதுத்தீன் அவுலியா பாதுஷா குத்புல் அக்தாப் சிஷ்தி தர்காவின் சந்தனக் குட உற்வசம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி பெரிய காஞ்சிபுரம் ஒலி முகமது பேட்டையிலிருந்து இரு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பாண்டு வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக திருக்கொடி தர்காவுக்கு கொண்டுவரப்பட்டது.

வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. தர்காவுக்கு கொண்டு வரப்பட்ட திருக்கொடிக்கு சிறப்புத் தொழுகை நடைபெற்றது. வெள்ளிக் கிழமை கொடி மரத்துக்கு குர்ஆன் மந்திரங்கள் ஓதப்பட்டு திரளான முஸ்லிம்கள் முன்னிலையில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

அக். 20-ம் தேதி (இன்று) சந்தனக்குட உற்சவம், அன்னதானம், தமிழ் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தர்காவளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE