ராமேசுவரம் கோயிலில் இலவச திருமணம் செய்ய பதிவு செய்யலாம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் இலவச திருமணத் திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்கள் மூலமாக 4 கிராம் தங்கம் உள்பட ரூ. 60 ஆயிரம் செலவில் வரும் அக்டோபர் 21-ம் தேதி திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை நேரில் அணுகுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE