திருப்பதி திருக்குடை ஊர்வலம் கவுனி தாண்டியது: கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்

By KU BUREAU

சென்னை: திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள், இந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை, சென்னகேசவ பெருமாள் கோயிலில் விமரிசையாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி வரவேற்புரையாற்றினார். அவர் பேசும்போது, “குடை என்பது ஆதிசேஷன். நாம் வெறும் திருக் குடையை சமர்ப்பிக்கவில்லை. லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனையாக குடையை சமர்ப்பிக்கிறோம்” என்றார்.

திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம் (வர்த்தமான சுவாமி) ஆசியுரையில், “என்னுடைய ஒரு குடையின் கீழ் யாரொவர் வருகிறாரோ அவர்களையெல்லாம் நான் ரட்சிக்கிறேன் என்பதே குடையின் தத்துவம். திருக்குடையை தரிசிக்கும் அனைவரும் சிறப்பாக பல்லாண்டு வாழ வேண்டும்” என்றார்.

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருமலை
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி
ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம்
(வர்த்தமான சுவாமி), இந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்ஆர்.
கோபால்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து, திருக்குடை ஊர்வலத்தை திருக்குறுங்குடி ஜீயர் மடம் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் 50-வது பட்டம் (வர்த்தமான சுவாமி), இந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைக் கண்ட பக்தர்கள் ‘நாராயணா, கோவிந்தா ’ என பக்தி பரவசத்தில் கோஷங்களை எழுப்பினர்.

திருக்குடை ஊர்வலம், என்எஸ்சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக மாலையில் கவுனி தாண்டியது. இன்று (அக்.3) முதல் சென்னை அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயில், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

திருக்குடைகள் திருமலையை அடைந்ததும், ஏழுமலையான் கோயில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வேங்கடமுடையானுக்கான வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE