அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று வருகை தரும் பாகிஸ்தானின் 200 யாத்ரீகர்கள்... வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

By காமதேனு

பாகிஸ்தானில் இருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வரும் 200 யாத்ரீகர்களுக்கு இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 22-ம் தேதி இதற்கான விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன்பிறகு, ஜனவரி 23-ம் தேதி முதல், இந்த கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்குச் சென்று பால ராமரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

பால ராமர் பிரதிஷ்டையில் பிரதமர் மோடி

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ராம் மந்திரில் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்ய நேரம் வழங்கப்பட்டது. பின்னர், சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில், மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை பால ராமருக்கு ஓய்வு நேரம் என்பதால், இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட தூதுக்குழு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இன்று வர உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்தி சமூகத்தினர் இந்தியாவில் ஒரு மாதம் சுற்றுலா வருகின்றனர்.

இரவு அலங்காரத்தில் ஜொலிக்கும் ராமர் கோயில்

"பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை வழியாக அவர்கள் வருகிறார்கள். அவர்களுடன் இந்தியாவின் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மதப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட உள்ளது.

இதற்காக சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் இருந்து இந்த சுற்றுலாப் பயணிகள் குழு பேருந்து மூலம் அயோத்தியை அடைவார்கள். பாரத் குண்டா, குப்தர் காட், ரூபன் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இக்குழு பார்வையிடும்" என ராஷ்டிரிய சிந்தி விகாஸ் பரிஷத் உறுப்பினர் விஸ்வ பிரகாஷ் ரூபான் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிந்தி யாத்ரீகர்கள் அயோத்திக்கு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள உதாசின் ரிஷி ஆசிரமம் மற்றும் ஷபரி ரசோய் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு சிறப்பு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் சரயு ஆரத்தியில் யாத்ரீகர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

ராமர் கோயில்

அந்த சந்தர்ப்பத்தில், சம்பத் ராய் சிந்தி யாத்ரீகர்களை வரவேற்பார். மேலும், அயோத்தியின் சிந்தி தாம் ஆசிரமத்தில் பாகிஸ்தான் யாத்ரீகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களும் பங்கேற்று பாகிஸ்தான் யாத்ரீகர்களை வரவேற்பார்கள்.

மேலும், சந்த் சதா ராமதர்பார் மடத்தின் அதிபரான யுதிஷ்டிர லால் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு சிந்தி சுற்றுலா பயணிகள் லக்னோ சென்று அங்கிருந்து ராய்பூர் செல்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE