புரட்டாசி மாதம் பிறந்ததில் இருந்தே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை கூடிய பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், சர்வ தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. அனைத்து காத்திருக்கும் அறைகளுமே பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பியது. இந்நிலையில், குடும்பத்தோடு விஜபி தரிசனத்தை மேற்கொள்ள, திருப்பதிக்கு ஒரு கோடி `கோவிந்தா' நாமம் எழுதி, எடுத்து வரச் சொல்கிறார்க.
அப்படி ஒரு கோடி ‘கோவிந்தா’ நமாத்தை எழுதிச் செல்பவர்கள், குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி, 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டிருந்தார். அப்போது, 25 வயதுக்குட்பட்டவர்கள் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவதைப் போன்று "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அப்படி ஒரு கோடி முறை எழுதாமல், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
புரட்டாசியில் பெருமாளையும், தாயாரையும் இப்படி வழிபட்டால் தரித்திரம் விலகும்!
சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி ஆவேசம்!
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!