'கையில் தடியோடு கூட்டமாக போங்க பக்தர்களே': திருப்பதியில் சிறுத்தை,கரடி நடமாட்டம்!

By காமதேனு

திருப்பதி திருமலை நடைபாதையில் சிறுத்தை மற்றும கரடிகள் நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்ளதால், பக்தர்களுக்கு வழங்கப்படும் கைத்தடியோடு செல்லுமாறு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்

ஆந்திரா மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் திருமலையானை வழிபட திருப்பதிக்கு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசலம் மலைத்தொடரில் ஏராளமான விலங்குகள் உள்ளன. மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்லும் போது சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் கடந்த சிலமாதங்களாக அதிகரித்துள்ளது. இதற்காக கேமரா வைத்து சிறுத்தைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் கரடி நடமாட்டம்.(கோப்பு படம்)

சிறுத்தை தாக்கி ஏற்கெனவே சிறுமி உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து சிறுத்தைகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கூண்டு வைத்து ஆறு சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. அத்துடன் தொடர்ந்து விலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், டிச.16 மற்றும் 26, 29- ஆகிய தேதிகளில் சிறுத்தையும், கரடியும் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து சென்றிருப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் திருப்பதி மலைப்பாதையில் செல்லக்கூடிய பக்தர்கள் மற்றும் பகல் நேரங்களில் செல்லக்கூடிய பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் பக்தர்கள் திருப்பதியிலிருந்து, திருமலைக்குச் செல்லும் போது அவர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

கோயிலுக்குச் செல்லும் பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாடுகின்றன என்ற தகவலால் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2023ல் 'நியூஸ் மேக்கர்' : பிரதமர் மோடிக்கு விருது!

உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் மழை!

அதிகாலையில் அதிர்ச்சி... லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்!

பகீர்... போதை மாத்திரை விற்பதில் தகராறு... +2 மாணவன் குத்திக்கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE