உஷார்... நாளை அக்.1 முதல் செல்போன், வீடியோ சாதனங்கள் கொண்டு செல்ல தடை!

By காமதேனு

நாளை அக்டோபர் 1ம் தேதி முதல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகளக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

பழநி மலைக் கோயில்

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறத்தது.

இந்நிலையில் கோவில் நிர்வாகம், பழனி கோயில் மலை மீது நாளை அக்.1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களைக் கொண்டு வர தடை விதித்துள்ளது அமலுக்கு வருகிறது. எனவே பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பழநி முருகன் கோயில்

இந்த அறிவிப்பை மீறியோ, அல்லது இது குறித்து தகவல் அறியாமல் செல்போன்களைக் கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவில் நுழைவாயிலில் பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் முடிந்து பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!

நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!

சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE