சதுரகிரி மலையில் இன்று முதல் 4 நாட்கள் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
சித்தர்கள் வாழும் மலையாக விளங்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் மாதம் தோறும் நாட்டின்பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்து வருகின்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி சதுரகிரி மலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இங்கு வருகை தரும் பக்தர்கள் புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வர வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.